Thursday, February 18, 2010

என்னவென்று சொல்வதம்மா..

இன்று காலை விகடனில் பெரியார் பற்றி ஒரு குறிப்பு படித்தேன். என் தாயும், மணைவியும் இறந்தபோது நான் மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு இருந்த இரண்டு குடும்ப தொந்தறவுகளும் முடிந்தன, இனிமேல் பொதுவாழ்க்கையில் நான் சுதந்திரமாக ஈடுபடுவேன் என்றார்.

திருமணம் என்ற சம்ப்ரதாயம் மூலம் தனி மனிதனுக்கு ஏற்படும் துன்பமும், அடக்குமுறையும், ஒவ்வொருவரின் வாழ்கையையுமே பயனற்று செய்து விடுகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் வாழ்கையை எண்ணற்ற மகிழ்ச்சியாய் கழிக்கவேண்டியதை, ஒரு அறைக்குள் ஒரு பெண்ணுக்குள் முடிந்து விடுகிறது.

சக மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்பும் அக்கறையும் இல்லாமல், தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்று மடியும் வாழ்க்கை எப்படி சரியாகும்.

குடும்பங்களற்று, உறவுகளற்று, எல்லைகளற்று, நோக்கமற்று இயற்கையிடம் இயற்கையாய் உறவாடும் சுகம் வேறெங்கு கிடைக்கும்.

திருமணம் ஆன யாரும் மகிழ்ச்சியா வாழ்வது இல்லை. அதை மீறி சிலர் நான் திருமண வாழ்கையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். ஆதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று வெறும் வாய்பேச்சு, மற்றொன்று சந்தோஷத்தின் எல்லையை குறுகிக்கொண்டு வாழ்வது.

நான் மேல் கூறியவற்றை ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லி இருக்கலாம் அனால் இப்போது சொல்வது தான் சரி. காரணம் எனக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்கள் முடிவடைய போகிறது.

-தீபன்

No comments: