Wednesday, March 17, 2010

மிதக்கும் பெண்கள்

சிறு வயதில் இருந்து உங்களுக்கு இருப்பது போலவே எனக்கும் விமானத்தில் ஒரு முறையாவது போகவேண்டும் என்று ஆசை இருந்தது. வாய்ப்பு கிடச்சுது. பறக்க தயாரானேன்.

ஹைதராபாத்கு முதல் முறையாக விமானத்தில் சென்றிருந்தேன். விமானம் பக்கத்தில் இருந்து பார்பதற்கு எப்படி இருக்கும், உள்ளே எப்படி, சீட் எப்படி, டிவி இருக்குமா, போன்ற பல கேள்வியுடன் புரியாத புதிரா எனக்கு இருந்தது, விமான பணி பெண்கள் எப்படி இருப்பார்கள், அவர்கள் வேலை மிட்டாய் கொடுப்பது மட்டும் தானா? இல்லை முத்தமும் விமானத்துக்கு ஏற்ப மொத்தமும் கொடுப்பார்களா? என்று பல சந்தேகங்கள்.

இதோ என் அனுபவத்தில் புதிர்க்கான விடைகள்.

உள்ளே நுழையும் போது அழகு என்று சொல்லப்படும் தகுதி உடைய இரண்டு பெண்கள் அரக்கை சட்டையும், முட்டி தெரியும் படி பாவாடையும் அணிந்து வரவேற்றனர். இருக்கையில் அமர்ந்த பிறகு சிறிது நிமிடம் கழித்து, பெல்ட் போடும் படியும், அவசர கட்டத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது பத்தியும் அக்கறையே இல்லாமல் போலி தனமாக நடித்து காண்பித்தார்கள். அவர்களுக்கு அலுப்பும் எனக்கு சிரிப்பும் வந்தது. பின்பு சீட் பெல்ட் போடும்படி அறிவுறுத்திய பின்பு விமானம் பறக்க ஆயுத்தமானது. பறந்தது.

பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு தள்ளு வண்டியை ஒரு "ஆண்" இழுத்து வரவும், அதில் அயல் நாட்டு குளிர் பானமும், பொட்டன சாப்பாடும் இருந்தது. ஒவ்வொரு வராக சென்று பணி பெண் என்ன வேண்டும் என்று கேட்டு வழங்கினால். மூணு மடங்கு விலை உயர்வுடன். பின்பு அனைவரையும் கவனித்து விட்டு அவசரமாக எதையோ வாயில் திணித்து கொண்டால். விமானம் தரை இறங்கியதும் மீண்டும் திருமண வீட்டு வரவேற்பு பெண்கள் போல நன்றி சொல்லி வழியனுப்பிவைத்தாள்.

நான் இறங்கிய பின்பு திரும்பி பார்த்தேன்.. அவர்களை, அவர்களும் திரும்பி பார்த்தார்கள்.. விமானத்தை.

விமானத்தில் இருந்து ஏர்போர்ட் போக ஒரு பஸ்சில் ஏற்ற பட்டேன். அப்போது தோணினது, நம்ம வீட்டு பக்கத்தில் இட்லி கடை வெச்சுருகக அன்னபூரணி அக்க பொண்ணு மட்டும் சிவப்பா, முக பரு இல்லாம தெளிவா இருந்துருந்தா, ஆங்கிலம் பேச பழகிருந்த, வெறும் கற்பனையில் மிதக்கும் சர்ராசரி பெண்ணாக இல்லாமல், ஆண்கள் வாய் பிளக்கும் மிதக்கும் பெண்ணாக ஆகிருப்பாள்.

சரி. அப்போ எனக்கு அன்போடு ரெண்டு ரூபாய்க்கு இட்லி பரிமாற யார் இருப்பா !

- தீபன்.