Thursday, February 18, 2010

ஆறாக கடலாக !

நேற்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு என் அலுவலகத்தில் பனி புரியும் ஐந்து சாகாக்களுடன் மது அருந்த சென்றிருந்தேன். நான் லெமன் ஜூஸ் பார்ட்டி. ஒரு ரவுண்டு போன பின்பு அனைவரின் வாயின் முலமாக வந்த மனதின் வார்த்தைகள் என்னை மிகவும் கவர்ந்தன.

போன இடம்- பேரூர் அருகே ஆளில்லாத காட்டுக்குள் ஒரு தனிமையான ரெசொர்ட். ஏதோ சுற்றுலா போனது போல் ஒரு அனுபவம். அதனால் என்னவோ தலைப்பு அங்கு இருந்து பிறந்தது.

நம் கல்லூரி நாட்களில் சென்ற சுற்றுலா தான், அனைவராலும் மறக்க முடியாத கடந்த காலம் . ஒவ்வொருவரும் அவர்கள் சென்ற சுற்றுலா பத்தி பேச ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கும் மறக்கமுடியாத, மறக்க விரும்பர சுற்றுலாகளும் உண்டு. ஏன் கல்லூரி சுற்றுலாக்கு மட்டும் இந்த சிறப்பு.

அந்த வயதில் நண்பர்கள் , பெண் , இயற்கை இந்த மூன்றை தவிர வேற எண்ணம் வருவது அரிதுதானே. நிரந்தர உண்மை இம்முன்று மட்டும் தானே! அப்போது இருந்த உயிர் துடிப்பு ஓடும் ஆறு போல.

நம் வாழ்கையை ஓடும் ஆறு போல் அமைத்துக்கொள்வதும் , கடல் என்ற முதிர்ச்சியை எப்போது அடையவேண்டும் என்று தீர்மானிப்பது நம்மிடம் தான் உள்ளது.

கல்லூரி காலத்தில் நாம் சிரித்ததை நினைத்து பார்த்தல் இப்போது அழுகை வரும். அப்போது அழுதவைக்கு இப்போது சிரிப்பு வரும் - வைரமுத்து.

ஆறு நிக்காதல்லவா !

நன்றி.

என்னவென்று சொல்வதம்மா..

இன்று காலை விகடனில் பெரியார் பற்றி ஒரு குறிப்பு படித்தேன். என் தாயும், மணைவியும் இறந்தபோது நான் மகிழ்ச்சி கொண்டேன், எனக்கு இருந்த இரண்டு குடும்ப தொந்தறவுகளும் முடிந்தன, இனிமேல் பொதுவாழ்க்கையில் நான் சுதந்திரமாக ஈடுபடுவேன் என்றார்.

திருமணம் என்ற சம்ப்ரதாயம் மூலம் தனி மனிதனுக்கு ஏற்படும் துன்பமும், அடக்குமுறையும், ஒவ்வொருவரின் வாழ்கையையுமே பயனற்று செய்து விடுகிறது. இது ஆண் பெண் இருவருக்கும் பொருந்தும். நம் வாழ்கையை எண்ணற்ற மகிழ்ச்சியாய் கழிக்கவேண்டியதை, ஒரு அறைக்குள் ஒரு பெண்ணுக்குள் முடிந்து விடுகிறது.

சக மனிதர்கள் மீதும், உயிர்கள் மீதும் அன்பும் அக்கறையும் இல்லாமல், தன் பெண்டு தன் பிள்ளை தன் குடும்பம் என்று மடியும் வாழ்க்கை எப்படி சரியாகும்.

குடும்பங்களற்று, உறவுகளற்று, எல்லைகளற்று, நோக்கமற்று இயற்கையிடம் இயற்கையாய் உறவாடும் சுகம் வேறெங்கு கிடைக்கும்.

திருமணம் ஆன யாரும் மகிழ்ச்சியா வாழ்வது இல்லை. அதை மீறி சிலர் நான் திருமண வாழ்கையில் சந்தோஷமாக இருக்கிறேன் என்று கூறுவார்கள். ஆதற்கு இரண்டு காரணங்கள், ஒன்று வெறும் வாய்பேச்சு, மற்றொன்று சந்தோஷத்தின் எல்லையை குறுகிக்கொண்டு வாழ்வது.

நான் மேல் கூறியவற்றை ஒரு ஆண்டுக்கு முன்பாக சொல்லி இருக்கலாம் அனால் இப்போது சொல்வது தான் சரி. காரணம் எனக்கு திருமணம் ஆகி ஒன்பது மாதங்கள் முடிவடைய போகிறது.

-தீபன்

Tuesday, February 16, 2010

தினமும் நூறு புத்தகங்கள் படிக்கிறேன்.

காலையில் தாமதமாக எழுவதில் இருந்து தொடங்குகிறது புரட்டல்கள். காலையில் இயந்திரத்தை விட வேகமாக வேலை பார்க்கும் என் தாயை பார்க்கும் போது பெண் அடிமைத்தனம் என்ற புத்தகத்தை தினமும் தவறாமல் படிக்கிறேன்.

என் தாய் செய்து வைத்திருக்கும் உணவை பார்க்கும் போது என் குலம், கோத்திரம், என் பாட்டியின் வாழ்க்கை என்ற குடும்ப வரலாறை படித்து முடித்து, அதை தொடர்ந்து நகரவாசிகளின் ஆரோகியமற்ற உணவு என்ற புத்கத்தை அனுபவித்து படிக்கிறேன்.

பின்னர் என் அழகான நிர்வாணத்தை ஆசிங்கமான ஆடைகளை கொண்டு மறைகையில், ஆடைகளுக்காக நம் கவனம், நிறம், அதன் முலமாக நம்மளை அடையாள படுதிக்கொள்கையில், ஆடைகளின் அரசியில் என்ற புத்தகத்தை படிக்கிறேன்.

வெளியில் சென்று ஆனைவரையும் பார்க்கும் போது, பணத்துக்காக இத்தனை போட்டிகளும் போரட்டங்களும் என்ற புத்தகத்தில் என்னை பற்றியும் ஒரு பக்கமுண்டு.


வேலைக்கு போகும் அனைவரின் வாழ்நாளும், அதிக சதவீகிதம்
அலுவலங்களில் தான் கழிகிறது. அங்கு நாம் என்ன வேலை, யாருக்காக எதற்காக செய்கிறோம், நாம் செய்யும் வேலை யாரையெல்லாம் பாதிக்கிறது என்ற விழிப்புணர்வு இல்லாமலே வாழ்கை கடந்து செல்கிறது. அடியால் என்ற புத்தகத்தில் முக்கிய பங்கு எனக்கும் உண்டு.

பின்பு, மாலை நேரத்து மயக்கம், நாம் ஒவொருவரும் மாலை நேரத்தை எப்படி கழிகறோம். நகையாடும் படி உள்ளதல்லவா ! இயற்கை - மாலை - பெண். இந்த புத்தகத்தை படிபதற்கு எனக்கு அளவுகடந்த ஆர்வம் உண்டு, ஆனால் வாசிபதற்கு புத்தகம் தான் இல்லை.

இரவு நேரத்தில் எதை உன்ன கூடாதோ அதை தேடி உண்டுவிட்டு, செயற்கை படுக்கைக்கு திட்டமிட்ட உறக்கத்திற்கு செல்லும் முன், இன்று நாள் எப்படி கடந்தது என்று பலர் யோசிக்க விரும்புவதில்லை. மீறி யோசித்தால் ......
வெற்றிடம் என்ற புத்தகம் உருவாகிறது.

கனவில் - ஆசைகள் கனவில் என்ற புத்தகம்.

மீண்டும் விடிகிறது.
படிபதற்கு புதிய புத்தகம் இல்லை.

- தீபன்.